கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றார்
No comments
Thanks for reading….