இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

U-19 Asia Cup 2024: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற வங்காளதேசம்!

tamilsolution_ad_alt

 

8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு) இலங்கை , வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இதையடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி இலங்கையையும், வங்காளதேச அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் இந்தியா – வங்காளதேசம் இடையிலான இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 198 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.



வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக எம்டி ரிசான் ஹோசன் 47 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் புகுந்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஆயுஷ் மத்ரே 1 ரன்னிலும், வைபவ் சூர்யவன்ஷி 9 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் 20 ரன்னிலும், கே.பி.கார்த்திகேயா 21 ரன்னிலும், முகமது அமான் 26 ரன்னிலும், ஹர்வன்ஷ் சிங் 6 ரன்னிலும், கிரண் சோர்மலே 1 ரன்னிலும், ஹர்திக் ராஜ் 24 ரன்னிலும், சேத்தன் சர்மா 10 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் இந்திய அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 139 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசம் 59 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. வங்காளதேசம் தரப்பில் இக்பால் ஹொசைன் எமன், எம்டி அஜீசுல் ஹக்கீம் தமீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.



No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.