இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சிறுபான்மை எம்.பிக்களை இணைக்க NPP தயார்

tamilsolution_ad_alt

 

தேசிய மக்கள் சக்தி (NPP) வியாழன் அன்று நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் என நம்புகிறது, ஆனால் தேசியத்தை அடைவதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கும் என அமைச்சர் விஜித ஹேரத் டெய்லி மிரருக்கு நேற்று மாலை தெரிவித்தார்.


நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர், புதிய பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வெல்வதில் NPP ‘மிகவும் நம்பிக்கையுடன்’ இருப்பதாகவும் ஆனால் அரசியல் சூழலை வலுப்படுத்துவதற்காக முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைக்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஹேரத் கூறினார்.


எவ்வாறாயினும், தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான இவ் அழைப்பு இச் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுமே தவிர ஐக்கிய மக்கள் ச்கதி (SJB) மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரடகளுக்கு (UNP) அல்ல என்று அவர் கூறினார்.


“தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களுடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆலோசிக்க நாங்கள் தயாராக உள்ளோம், ஏனெனில் இதன் மூலம் இந்த நாட்டில் நாம் இலக்காகக் கொண்ட தேசிய ஐக்கியத்தை உண்மையாகவே அடைய முடியும். எனினும் ஐக்கிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் கூட NPP யால் அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதுடன் அனைத்து சமூகங்களுக்காகவும் சேவையாற்ற முடியும் என்பதையும் நான் கூற விரும்புகிறேன். ” என்று ஹேரத் கூறினார்.


ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த வாரங்களில் தனது பாராளுமன்ற வேட்பாளர்களுக்கான பிரச்சார உரைகளில் ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் NPP மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என நம்புவதாகக் குறிப்பிட்டு, இது வலுவான, சக்திவாய்ந்த அரசாங்கத்திற்கான நேரமே தவிர, வலுவான எதிர்க்கட்சியை அமைப்பதற்கான நேரமல்ல அல்ல என்று கூறினார்.


எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் NPP பிரபல்யம் குறைந்துள்ளதாகவும், SJB மீதான மக்களின் ஈடுபாடு மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் எதிர்க்கட்சியான SJB கூறுகிறது.



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த வாரம் புதிய பாராளுமன்றத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனுபவம் வாய்ந்த நபர்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் தன்னுடன் கடந்த 2 வருடங்களாக பணியாற்றியவர்கள் அனுபவமிக்கவர்கள் அதனால் அவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.


வியாழக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதால், இரண்டு நாள் அமைதிக் காலம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.



புதிய பாராளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

KBKNEWS MEDIA 



No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.