முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, கட்சியின் இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவர் இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் அந்த வெற்றிடத்திற்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு சட்டத்தில் தடை இல்லை. இதனால் அந்த இடத்திற்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட உள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
KBKNEWS MEDIA
No comments
Thanks for reading….