தந்தை வாகனத்தை பின்னோக்கி செலுத்திய போது மூன்று வயது மகள் வாகனத்தில் மோதி உயிரிழந்த சோகம் மருதானை பகுதியில் பதிவு
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத குடியிருப்புக்கு முன்பாக ஜீப் வாகனமொன்று வீட்டிற்கு அருகில் நிறுத்துவதற்காக சென்ற போது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (10) ஜீப்பை நிறுத்துவதற்காக தந்தை வாகனத்தை பின்னோக்கிச் சென்றபோது ஜீப்பின் பின்னால் இருந்த 3 வயதுக் குழந்தை வாகனத்தின் அடியில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
KBKNEWS MEDIA
No comments
Thanks for reading….