இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவெடிக்கை

tamilsolution_ad_alt

 

இலங்கையர்களை பாதுகாப்பாக அழைத்து வர ஐந்து மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள்  நாடு திரும்பும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்  என   தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.


ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் யுத்த சூழ்நிலை  குறித்து இன்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் ஊடகவியாளர் சந்திப்பு நடைபெற்றது 


இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்.


ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள  இலங்கை தொழிலாளர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக 5 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டில்  எரிபொருள் மற்றும்  எரிவாயு  தட்டுப்பாட்டுப்   நிலை ஏற்படாமல் இருக்க, பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார் 


இஸ்ரேலில் மாத்திரம் 12,000க்கும் அதிகமான இலங்கைத் தொழிலாளர்கள், ஜோர்தானில் 15,000, லெபனானில் 7,500, எகிப்தில் கிட்டத்தட்ட 500 பேயர்  மோதல் வலயத்தில் பெருமளவிலான இலங்கையர்கள் பணியாற்றுவதாக அமைச்சர் கூறினார். ஆபத்தான வகையில் எல்லைகளை கடக்காமல் பாதுகாப்பான முறையில் செயற்படுமாறு இலங்கை தொழிலாளர்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

 தேவை ஏற்படும் பட்சத்தில் தொழிலாளர்களை  கடல் அல்லது விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


இவ்வாறே , சவூதி அரேபியா, குவைத் மற்றும் பிற நாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களும் இந்த நிலைமையால் வேலைவாய்ப்பை  இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். தேவைப்படும் போது அவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரவும், அதுவரை பாதுகாப்பான தங்குமிட வசதிகளை வழங்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது . 


எனவே  நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை  செய்து கொடுப்பட்டு சமுகமையமாக்கப்படுவார்கள்  என அமைச்சர் தெரிவித்தார்.


    KBKNEWS MEDIA

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.