கேகாலை ருவன்வெல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு பேசினார்.
ராஜபக்ஷ குடும்பம் செய்த களவுகளுக்கு எந்த தண்டனையும் இதுவரை கொடுக்கப்படவில்லை, நாம் கொடுக்கும் ஒரே தண்டனை இந்த தேர்தலில் நாமலை ஸீரோவாக்கி தோற்கடிப்பதுதான், அந்த தோல்வியை நினைத்து வருந்தி வருந்தியே மஹிந்த மாய வேண்டும்.
ஜேவீபி 60 வருட கட்சி, என்னை விடவும் வயது அதிகம், செய்தது ஒன்றுமில்லை, ஆச்சார்ய, மஹாச்சார்ய எனும் போர்வையில் எந்தவித முன்பின் அனுபவும் இல்லாமல் வந்து இப்போது பைலா போடுகிறார்கள்.
ஏற்கனவே இதுபோன்று முன்பின் அரசியல் தெரியாத கோட்டாவை ஜனாதிபதியாக்கி பட்ட அவஸ்த்தை எல்லோருக்கும் இருக்கிறது. கோட்டாபயக்கு நடந்ததுதான் அவர்களுக்கும் நடக்கும் என்பதை மறவாதீர்கள் என்றார்.
முஜீபுர்ரஹ்மான், மனோகணேசன், சஜித் பிரேமதாச ஆகியோரும் இக்கூட்டத்தில் உரையாற்றினார்கள்.
KBKNEWS MEDIA
No comments
Thanks for reading….