அரசாஙக் சேவை முழு அரசாங்க சேவையையும் உள்ளடக்கிய விரிவான மனித வள கணக்காய்வை மேற்கொண்டு, மனித வள முகாமைத்துவ திட்டத்தின் அடிப்படையில் முழு அரசாங்க சேவையையும் மறுசீரமைத்தல்.
அரசு ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுப் படி உயர்வு: எமது அரசாங்கம் தகுதியான அனைத்து அரசதுறை ஊழியர்களுக்கும் வழங்கப்படும் மாதாந்த வாழ்க்கைச் செலவுப் படியை தற்போதைய ரூ. 17,800 வரம்பிலிருந்து குறைந்தபட்சம் ரூ. 25,000 வரை உயர்த்துவதுடன் இது தற்போதைய படிகளுடன் சிராக்கப்படும்.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள உயர்வு: அரச சேவைக்கான குறைந்தபட்ச அடிப்படை மாதச் சம்பளம் (தற்போதைய தர விகிதங்களின் அடிப்படையில்) 24% உயர்த்தப்படும். இந்த சீராக்கலில் தற்போது அனுபவிக்கும் பல்வேறு சீராக்கல்கள் மற்றும் படிகளுக்கான சில விதிமுறைகளும் நிபந்தனைகளும் அடங்கும். மேற்கண்ட இரண்டு சீராக்கல்களும் சேர்ந்து, வாழ்க்கைச் செலவுப் படி உட்பட அரச சேவையின்
குறைந்தபட்ச தேறிய சம்பளம் ரூ. 57,500 ஆக இருக்கும்.
வயது 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசின் பங்களிப்புடன் முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, ஆரோக்கிமான குடிமக்களை உருவாக்குவதன் மூலம், அரசாங்கத்தின் சிகிச்சை செலவைக் குறைத்தல் இதன் நோக்கமாகும்.
சிரேஸ்ட குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு நேரடி நிதி உதவி வழங்கப்படும்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள 50,000 நபர்களுக்கான நலன்புரி உதவித் தொகையை மாதத்திற்கு ரூ. 10,000/= வரை (ரூ. 7,500/= இல் இருந்து) அதிகரித்தல்.
820,000 முதியோர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி உதவித் தொகையை மாதத்திற்கு ரூ. 5,000/= வரை (ரூ. 3,000/= இல் இருந்து) அதிகரித்தல்.
அபாயத்திற்கு உள்ளான மற்றும் இடம்பெயர் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 10,000 (ரூ. 5,000 இலிருந்து) வரையும், ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 10,000 (ரூ. 8,500 இலிருந்து) வரையும், மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு மாதம் ரூ. 15,000 விகிதம் வழங்கப்படும்.
No comments
Thanks for reading….