9வது மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி வென்றது.
இலங்கை அணி, இந்திய அணியை எட்டு விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.
ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்படி, 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
KBKNEWS MEDIA
No comments
Thanks for reading….