தோட்ட அதிகாரிகள் பாடசாலை மாணவர் மீது தாக்குதல் நடத்தியமை கண்டிக்கத்தக்க செயலாகும்! - உரிய நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் ரூபன் பெருமாள்
இவ்விடயம் தொடர்பாக குறித்த தோட்டத்தின் இளைஞர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததையடுத்து, அக்கணமே குறித்த பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களுடன் கலந்துரையாடியதுடன் இவ் விடயம் தொடர்பாக கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, குறித்த தோட்ட உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி தோட்ட அதிகாரிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நிவிதிகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததுடன், நிவித்திகல பிரதேச வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாக்குதலுக்குள்ளான மாணவனை சந்தித்து நலம் விசாரித்ததாகவும் ரூபன் பெருமான் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
No comments
Thanks for reading….