இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

2022 பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

tamilsolution_ad_alt


சிகரெட் மற்றும் மதுவரி அதிகரிக்கப்படும். அதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் ஒன்றின் விலை ரூபா 5 அதிகரிக்கப்படவுள்ளது.

திருத்தப்பட்ட மது வரி தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும்.

விபத்துக்குள்ளாகும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிட தீர்மானம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்க ரூ.15,000 மில்லியன் ஒதுக்கீடு.

திரவப்பால் உற்பத்தியை அதிகரிக்க தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாயை ஒதுக்க எதிர்பார்க்கின்றோம்.

வீதி அபிவிருத்திக்காக மேலதிகமாக 20,000 ரூபாய் மில்லியனை ஒதுக்கீடு.

கொரோனா முடக்க காலத்தில் வருமானத்தை இழந்த பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க, 400 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.

வருமானத்தை இழந்த ஓட்டோ சாரதிகளுக்கு 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் தமது பிரதேசங்களின் அபிவிருத்திக்காக ரூ.15 மில்லியன் ஒதுக்கப்படவுள்ளது.

அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65ஆக உயர்த்தல்.

வானொலி/ தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமங்கள் ஏல அடிப்படையில் வழங்கப்படும்.

அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் மானியம் 5 லீற்றரால் குறைப்பு

மின்சார கட்டணம் 10 சதவீதம் குறைப்பு

புதிய அரச அலுவலகங்களின் நிர்மாணப் பணிகள் 2 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் தொலைப்பேசி செலவீனங்கள் நூற்றுக்கு 25 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்காக புதிதாக அலுவலக கட்டடங்களை அமைப்பதை இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்த முன்மொழிகிறேன்

ஒரு எம்.பி., ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். அதனை 10 வருடங்கள் அதிகரிக்க முன்மொழிகிறேன். இது ஜனாதிபதி பதவி உள்ளிட்ட அனைவரும் அடங்குவர்.

-2022 பட்ஜெட்டில் நிதியமைச்சர்-

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.