மொஹம்மட் இல்யாஸ் ரய்ஹானா உம்மாவுக்கு புதல்வராக 1961-06-06 ம் திகதி மாத்தளை மாவட்டத்தில் உள்ள மடவளை உள்பொத எனும் சிற்றூரில் பிறந்தார்.
பாடசாலை கல்வியை இரஜ்ஜமனை முஸ்லிம் வித்தியாலயத்திலும், மடவளை உள்பொத சிங்கள மகா வித்தியாலயத்திலும் கற்றார்.
சன்மார்க்க கல்வியை அட்டாலைச்சேனை கிழக்கிலங்கை அறபுக்கல்லூரியில் கற்று, 1986 ஆம் ஆண்டு அல் ஆலிம் பட்டத்தை பெற்றுக் கொண்ட அவர் அதே கல்லூரியில் போதனா ஆசிரியராக 1990 ம் ஆண்டு வரை சன்மார்க்க கல்வி போதித்தார்.
மர்ஹும் பத்தாஹு ஆசிரியரின் புதல்வியை திருமணம் செய்வதன் மூலம் கும்புக்கந்துறை ஊருக்கு அறிமுகமானார். பின் சில காலம் அம்பகஹலந்தை ஜும்ஆப் பள்ளியில் பிரதம பேஷ் இமாமாக கடமையாற்றிக் கொண்டு இருக்கும் வேளை 1993 ம் ஆண்டு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. அதே வருடம் கும்புக்கந்துறை ஜும்ஆப் பள்ளி வாசலில் இமாமாக கடமையாற்றவும் இணைந்து கொண்டார்.
அத்துடன் பேராதனியயில் 1993 தொடக்கம் 1996 ம் ஆண்டு வரை ஆசிரியர் தொலைக் கல்வி பாடநெறியை பூர்த்தி செய்து ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்பட்டார்.
கும்புக்கந்துறை அல்ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றிய பின் சில மாதங்கள் தெல்தெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு இடம் மாற்றம் பெற்றுச் சென்று மீண்டும் அல் ஹிக்மாவில் மௌலவி ஆசிரியராக கடமையாற்றினார்.
28 வருட ஆசிரியர் பணியற்றிய இவர் 06-06-2021 ம் திகதி ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
ஆசிரியர் பணியோடு கும்புக்கந்துறை மஸ்ஜிதுல் அக்பர் ஜும்ஆ பள்ளியில் பிரதம பேஷ் இமாமாகவும், நூராணிய்யா குர்ஆன் மத்ரஸாவில் அதிபராகவும் கடமையாட்டுகிறார்.
நற்பணி நிறைவு நாளில் நல் உள்ளங்கள் கூடி வாழ்த்தட்டும் ! அல் ஹிக்மா பள்ளி நினைவுகள் உள்ளுந்தோறும் உவகைப் பூக்கள் பூத்திடட்டும் ! வளங்களைக் கரங்களில் இல்லத்தில் இறைவனருளால் உறவுகளோடு மிஞ்சும் இனிமையாய்ப் பயணம் தொடரட்டும் ! வாழ்க வளமுடன் !
No comments
Thanks for reading….