சில இளைஞர்களின் பொறுப்பற்ற செயலால் முஸ்லிம் சமூகம் மென்மேலும் பின்னடைவையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.
''போதை வியாபாரங்களில் ஈடுபட்டுக் கொண்டு...
கஷ்டப்பட்டு உழைப்பவர்களின் பணங்களை பொருட்களை சூரையாடிக் கொண்டு ....''
ஏழைகள் தொழிலுக்காக வளர்க்கும் ஆடு,மாடு, கோழி போன்ற கால்நடை, பறவைகளை திருடிக் கொண்டு ....’’
இவ்வாறு ஒரு கூட்டம் எமது சமூகத்தை நாசமாக்கி முஸ்லிம்களின் மானத்தையே விற்று ஊரின் பெயருக்கும் கலங்கத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல முழு இலங்கை முஸ்லிங்களினதும் நற் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்திய சஹ்ரான் எனும் மன நோயாளியின் செயலின் பின்னர் நடக்கும் கைதுகள் மேழும் நமது சமூகத்தை ஸதம்பிக்க வைத்திருக்கின்றது. அண்மையில் நடந்த சில சம்பவங்கள் இதற்கு எடுத்துக்காட்டு...
"சஹ்ரான் செய்ததைப் போல செய்ய வேண்டும்.. இந்தியாவின் நிலைமை இலங்கைக்கு வர வேண்டும்..."
இப்படி சமூக ஊடகங்களில் கருத்துகளை தெரிவித்தார் என்று, கம்பளையை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர்தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் இந்த மாணவனை தடுத்துவைத்து விசாரிக்கும் பொலிஸ், அவர் அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டாரா என்றும் தேடுகிறது...
அதேசமயம், பெருநாள் வெடி கொளுத்த வானவெடிகளை தயாரித்தபோது அவை வெடித்ததால் படுகாயமடைந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கடந்த வாரம் குருநாகலில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.இவர்கள் காயமடையும் அளவுக்கு அப்படி என்ன வெடிபொருள் இருந்தது என்று ஒருபக்கம் விசாரணை நடக்கிறது.
சஹ்ரான் குழு செய்த வேலைகளால் இன்றுவரை நாட்டில் தலைநிமிரமுடியாதிருக்கும் முஸ்லிம் சமூகத்தை இன்னுமின்னும் நசுக்கும் வகையில், பொறுப்பற்ற ரீதியில் முஸ்லிம் இளைய சமுதாயம் செயற்படுவது கவலைக்குரியது.
இன்னும் சொல்லுவதென்றால் கண்டியைச் சேர்ந்த நான்கு மத்ரஸா மாணவர்கள் அதிவேகப் பாதையில் காரில் தலையை வெளியே போட்டுச் சென்றது நாம் அனைவரும் அறிந்த விடயமே!
இவர்களை
கைது செய்த போலிஸ் இவர்களுக்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பிருக்கின்றது எனும் கோணத்தில் விசாரணை நடாத்தியுள்ளனர்.
இன்னும் பல நிகழ்வுகள் இங்கு குறிப்பிடப்படவில்லை.
தனிநபர்கள், தத்தமது உணர்ச்சிப்பெருக்கால் அல்லது உசுப்பேற்றும்வகையில்பொதுவெளியில் வெளியிடும் சிறு விடயம், வெறுமனே அவர்களை மட்டும் பாதிப்பதில்லை. ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்தையே பாதிக்கிறது.
சஹ்ரான் குழு என்ன செய்யப்போகிறது என்று தெரியாமலே அந்தக் குழுவின் உறுப்பினர்களுடன் நட்பு பாராட்டிய எத்தனையோ அப்பாவி இளைஞர்கள் இன்று சிறையில் இருக்கின்றனர்.
தமது குற்றமற்றதன்மையை நிரூபித்து சட்ட உதவியுடன் அவர்கள் வெளியில் வரமுடியாத நிலைமை இப்படியான பொறுப்பற்ற சிலரால் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் துயரம்..
சமூக ஊடகங்களில் நல்லவிதமாக, முற்போக்குச் சிந்தனையுடன் எழுதிவந்த சில முஸ்லிம் இளைஞர்களின் பேனா இப்போது மௌனித்திருப்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஏனெனில் அவர்களின் எழுத்துகளுக்கு தவறான கற்பிதங்கள் வழங்கப்படுவதால் நிலைமை சீராகும்வரை அமைதியாக இருப்போம் என்று கருதி அவர்கள் பொதுவெளிக்கே வருவதை குறைத்துவிட்டனர். நிலைமை சீராகும்வரை இதைத்தவிர வேறு வழியும் இல்லாத நிலை...
அப்படியான சந்தர்ப்பத்தில் சில இளைஞர்களின் பொறுப்பற்ற செயலால் முஸ்லிம் சமூகம் மேலும் மேலும் பின்னடைவையே சந்தித்துக் கொண்டிருக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ சஹ்ரானுக்கு முன், சஹ்ரானுக்கு பின் என்று முஸ்லிம்கள் தமது ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்துவைக்க வேண்டியிருக்கிறது.
ஒரு சிலரின் தவறுகளுக்கு அவர்களின் தாய் தந்தை நியாயம் கற்பிப்பதும் வேதனைத் தரும் விடயமே.
தயவு செய்து பள்ளி நிருவாகம், ஊர் அரசியல் வாதிகள், சமூக அமைப்புகள், சமூகப் பெரியார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இப்படியான இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகளைக் கூறி அவர்களை சீர்திருத்த முன்வாருங்கள்... இவர்களை கண்டும் காணாமல் நீங்கள் இருந்தால் அவர்களால் ஏற்படும் விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்...
அன்புள்ள ஒரு சகோதரன் என்ற அடிப்படையில் இதனைக் கூறுகிறேன்...
இப்படிக்கு
நலன் விரும்பி.
No comments
Thanks for reading….