பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புக்கள் ஆகியவற்றை மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்று கூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் வெசாக் பூரணை தினம் மற்றும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை தமது வீடுகளில் இருந்தவாறே கொண்டாடுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
KUMBUKKANDURA NEWS
No comments
Thanks for reading….