பொலநறுவை மாவட்டத்தின் மேலும் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொலநறுவை – கிங்குருகொட பிரதேசத்திற்குட்பட்ட சிறிகெத கிராம உத்தியோகத்தர் பிரிவு இவ்வாறு தனிமைப்படுத்தப்படுள்ளது.
அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை பிரதேசத்திற்குட்பட்ட பல்லேகும்புர கிராம உத்தியோகத்தர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
KUMBUKKANDURA NEWS
No comments
Thanks for reading….