மாத்தளை, குருணாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குருணாகல் மாவட்டத்தில் பன்னல பொலிஸ் பிரிவு மற்றும் உடுபத்தாவ, கல்லமுன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் என்பன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
KUMBUKKANDURA NEWS
No comments
Thanks for reading….