இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பாடசாலைகள் நாளை மறுதினம் புத்தாண்டு விடுமுறைக்குப் பின் ஆரம்பமாகிறது

tamilsolution_ad_alt



முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு, நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (19) முதல் வழமை போல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டுதல்களின் படி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான முந்தைய சுற்றறிக்கையின்படி பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளளனஎ ன அமைச்சர் சுட்டிக்காட்டினார்.இது குறித்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் விளக்கமளித்தார்.

"மேல் மாகாணம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து தர பாடசாலைகளும் ஏப்ரல் 19 ஆம் திகதி திறக்கப்படும். ஆரம்ப பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளும் ஏப்ரல் 19 அன்று புதிய ஆண்டில் திறக்கப்படும்." என்றார்.இதே வேளை முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு பெருநாளுக்கு பின்னர் ஆரம்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.