முஸ்லிம்களின் ரமழான் காலப்பகுதியில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே, இவ்வாறு சுகாதார அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி,
01. ரமழான் காலப்பகுதியில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே பள்ளிவாசல்களுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
02 பள்ளிவாசலின் உள்பகுதியிலும், நுழைவாயிலிலும், அதிக நபர்கள் ஒன்று கூட முடியாது.
03. அத்துடன் பள்ளிவாசலின் உட்பகுதி மற்றும் நுழைவுப் பகுதிகளில் ஒரு மீற்றர் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
04. மேலும் தொழுகைக்கு வருகை தரும் நபர்கள், முஸல்லா எனப்படும் விரிப்புகளை கொண்டுவர வேண்டும்
05. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் முகக் கவசம், தலைக்கவசம், கைக் கவசம் போன்றவற்றை அணிய வேண்டும்.
06. நிர்வாகத்தினர் பாதுகாப்பான உடைகளை அணிந்து, பள்ளிவாசலுக்குள் வருகைதரும் நபர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிவாசல் வளாகத்தில் கைகளை கழுவதற்கான திரவங்களையும், சவர்க்காரங்களையும் வைக்க வேண்டும்
07. பள்ளிவாசலில் நோன்பு திறப்பதற்காக விநியோகிக்கப்படும் கஞ்சியை இம்முறை வழங்க முடியாது
08. பள்ளிவாசலின் உட்பகுதியிலோ, வெளிப்புறத்திலோ உணவு மற்றும் குளிர்பான வகைகளை விற்பனை செய்ய முடியாது.
09. இந்த விடயங்களை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிராந்திய பொது சுகாதார பரிசோதகர்கள் இது தொடர்பில் கண்காணிக்க வேண்டும்.
KUMBUKKANDURA NEWS
No comments
Thanks for reading….