இலங்கைவாழ் கிறிஸ்தவர்களால் நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ளது.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக முப்படையினர், பொலிஸ் துறையினர் உட்பட பாதுகாப்புப் பிரிவின் அங்கத்தவர்கள் 12 ஆயிரத்து 47 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையின் பல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 500 பேர் வரையில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
KUMBUKKANDURA NEWS
No comments
Thanks for reading….