பதுளை - நாரங்கல-கந்த (மலை) பகுதிக்கு மீள் அறிவித்தல் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தயா தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சூழலை மாசுபடுத்தியமை, சுற்றுலாக் குழுக்கள் இரவு வேளையில் தங்கியிருந்து மேற்கொள்ளும் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றாடல் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கான வழிமுறை வகுக்கப்பட்ட பின்னர் இந்த சுற்றுலா பகுதி மீண்டும் திறக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்
No comments
Thanks for reading….