கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சை ஆகியன நடைபெறும் காலப் பகுதியில் மாற்றத்தினை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய கல்வி பொதுத் தராதர (சா/த) பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும், கல்வி பொதுத் தராதர (உ/த) பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்த திட்டமிட்டப்படுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
இந்த புதிய யோசனைக்கு அனுமதியை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக செலவிடும் 9 மாத காலத்தை குறைத்துக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமயில் அரசாங்க வைத்திய அதிகாரிகளுடனான முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் இன்று (01) திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதன்போதே கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-பிரதமர் ஊடகப் பிரிவு
No comments
Thanks for reading….