புதிய கொரோனா வகைகளை அடையாளம் கண்டமை மற்றும் தொற்றாளர்களிம் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முற்றிலுமாக பூட்டப்படுமா என்பது குறித்து வார இறுதி ஆங்கில செய்தித்தாள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இருப்பினும், இது குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும், இது நாளை (15) கொரோனா எதிர்ப்பு கூட்டத்தில் தேசிய பணிக்குழு முடிவு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இம்முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரலும் தொற்றுநோயியல் பிரிவு நிலைமையை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
No comments
Thanks for reading….