மேல் மாகாண பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறக்க மேற்கொண்டிருந்த தீர்மானம் ரத்துச் செய்யப்படுவதாக* கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மேல் மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர, நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் தற்சமயம் திறக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்குட்பட்ட 1,576 பாடசாலைகளில் 907 பாடசாலைகள் கடந்த ஜனவரி 25ஆம் திகதி முதல் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் பரிந்துரைகளை பெற்றுள்ளதுடன், அந்தப் பரிந்துரைகள் சுகாதார அமைச்சின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
கொழும்பு மாவட்டத்தின் 412 பாடசாலைகளை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிப்பதில் மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என மாவட்ட அபிவிருத்திக் குழு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Thanks for reading….