மினுவங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றை தடுப்புதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, மினுவங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லொழுவ கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வரகாமுர, மீதெனிய , மற்றும் தெஹிபிட்டிய ஆகிய கிராம சேவகர் பிரிவுளும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Thanks for reading….