🤯நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,345 ஆக அதிகரித்துள்ளது.
🤯கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் இன்று (25) அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
👉ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வருகைத்தந்த (2)இருவர்,
👉கட்டாரிலிருந்து வருகைத்தந்த 06 பேர்,
👉உக்ரைனிலிருந்து வருகைத்தந்த (3)மூவருக்கும் மற்றும்
👉அல்பைனிலிருந்து வருகைத்தந்த (1)ஒரு வருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
🔊கொரோனா வைரஸ் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,158 ஆக பதிவு
🚨இந் நிலையில், 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
🚨தொற்றுக்குள்ளான 174 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
🔴இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக 278,145 PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Thanks for reading….