நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறைக் கல்வி வலய கமு/சது/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் உலக சிறுவர் தின நிகழ்வு நேற்று (02) பாடசாலை அதிபர் ஏ. அப்துல் றஹீம் அவர்களின் தலைமையில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள் இணைந்து பாடசாலை எல்லைக்குட்பட்ட பெற்றோர்களுக்கு விழிப்பூட்டும் வகையில் "எங்கள் நாடு எங்கள் கையில்" மற்றும் "பேதையே மனித குலத்தின் சாபம்" என்ற கோசங்களோடு பதாதைகளை ஏந்திக்கொண்டு வீதி உலா வந்தனர்.
இரண்டாம் கட்டமாக நடைபெற்ற உலக சிறுவர் தின மேடை நிகழ்வுகளில் மாணவர்களது நிகழ்வுகள், மற்றும் "போதையும் பேரழிவும்" என்ற மாணவர்களது நாடகமும் நடைபெற்றதுடன் மௌலவி யூ.எல். மஃறூப் (மதனி) அவர்களினால் போதையும் இளைஞர்களும் என்ற தலைப்பில் உரையும் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களை கௌரவப்படுத்தி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
KUMBUKKANDURA NEWS
No comments
Thanks for reading….