தற்போதைய சூழ்நிலையில் மாவட்டங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு சட்டத்திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கை முறை வழமைக்கு திருப்பும் நடவடிக்கைக்கு அமைய இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 11ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மே மாதம் 11ஆம் திகதியில் இருந்து மக்கள் வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகளை வழமைக்கு திருப்பும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் விசேட சட்ட திட்டங்கள் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.
கடமைக்கு செல்லும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்கனவே தயாராக உள்ளதென இலங்கை போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 11ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், அத்தியாவசிய சேவைக்காக மாவட்ட எல்லையை கடந் து கொழும்பு செல்வது தொடர்பில் விசேட முறை ஒன்று தற்போது வரையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான தகவல்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Thanks for reading….