May 07, 2020
வெலிகம பிரதேசத்தில் உயிரிழந்த முஸ்லிம் பெண் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்கு வெலிகம பொலிஸ் தலையகம் இன்று (07) தற்காலிகத் தடை விதித்துள்ளது.
வெலிகம, புதிய தெருவைச் சேர்ந்த 54 வயதான பெண் ஒருவர் நீண்டகாலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில், கடுமையாக அவர் சுகயீனமடைந்தமையால் அவர் இன்று காலை மாத்றை நகரிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நோயாளியான பெண்ணை அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அங்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த பெண்ணை அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்காது அவரை வீட்டுக்கே கொண்டு சென்ற நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்குவதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில் இது தொடர்பில் வெலிகம தலைமைப் பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அங்கு சென்ற பொலிஸார் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதனை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.
குறித்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Thanks for reading….