இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்த புதிய அறிவிப்பு

tamilsolution_ad_alt

May 15, 2020

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. நாடு முற்றாக பாதுகாப்பில் உள்ளது என்ற சான்றிதழ் வழங்கப்படும் வரையில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது என்கிறார் கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும. நாட்டில் உள்ள பாடசாலைகளில் 582 பாடசாலைகளுக்கு நீர் வசதிகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை அடுத்து பாடசாலைகள் குறித்து நாம் ஆராய்ந்து பார்த்த போது முதல்தடவையாக பல முக்கிய காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள 10 ஆயிரத்து 167 பாடசாலைகளில் 582 பாடசாலைகளுக்கு நீர் வசதிகள் இல்லை. மாணவர்கள் கைகளை கழுவ வேண்டும் என்ற கோரிக்கை இப்போது சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து பார்த்த போதே இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

கொவிட் -19 தாக்கம் காரணமாக பல விடயங்களில் நாம் இலகுவாக கையாள பழகிக்கொண்டுள்ளோம். நாம் இழந்த பல விடயங்களை எமக்கு கொவிட் வைரஸ் மீண்டும் தந்துள்ளது. ஒரு விதத்தில் இந்த தாக்கம் நல்லதென்றே நினைக்கிறேன்.

அதேபோல் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த உறுதியான தீர்மானம் இப்போதுவரையில் எடுக்கவில்லை. ஆனால் மாணவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்.

அதுவரையில் எம்மால் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாட முடியாது. சகல பாடசாலைகளுக்கும் சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். கைகளை கழுவ அதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட வேண்டும்.

எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் மாணவர்களின் பாதிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆகவே நல்ல மாற்றங்கள் விரைவில் உருவாக்கும் என அமைச்சர் கூறினார்.

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.