கொழும்பு , கம்பஹா , களுத்துறை , புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் இருக்கும்போது அத்தியாவசிய சேவைகளுடன் இயல்பு வாழ்வை ஏற்படுத்தும் பணிகள் மே 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன .
மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த இதர அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை காலை ஐந்து மணிக்கு ஊரடங்கு தளரும் .
பின்னர் இந்த மாவட்டங்களில் தினசரி 6 ஆம் திகதி வரை இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் . இந்த மாவட்டங்களில் அதன் பின்னர் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு 11 ஆம் திகதி காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் . இதன்படி 6 ஆம் திகதி இரவு 8 மணி முதல் 11 திங்கட்கிழமை காலை 5 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும் .
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Thanks for reading….