திகன பிரதேசத்தில் அம்பால என்னும் கிராத்தைச் சேர்ந்த பேரெகெட்டிய விஹாராதிபதியின் மரணம் சமய , சமூக நல்லிணக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பெரும் பேரிழப்பாகும். அந்நாருக்கு கண்டி வாழ் முஸ்லிம்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர்.
திகன பிரதேசத்தில் அம்பால என்னும் கிராத்தைச் சேர்ந்த பேரெகெட்டிய விஹாராதிபதி உயிரிழந்துள்ள தேரருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக கண்டி மாவட்ட , நகர ஜம்மிய்யதுல் உலமா, கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம். ஆகிய அமைப்புக்களின் பிரதிதிநிதிகள் விஜயம் செய்தனர்.
48 வயதுடைய இவர் 29 ஆம் திகதி மரணம் எய்தினார். இருவருடைய இறுதிக் கிரியை நேற்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இறுதி மரியாதை செலுத்துவதற்காக அரசியல் பிரமுகர்கள், பௌத்த சமயத் தலைவர்கள் என ஊர் மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். விசேடமாக அந்நாருக்கு மரியாதை செலுத்துவதற்காக கண்டி மாவட்டம் மற்றும் நகர ஜம்மிய்யதுல் உலமா, கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம். ஆகிய அமைப்புக்களின் பிரதிதிநிதிகள் விஜயம் செய்தனர்.
இதில் கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி எச். உமர்தீன், உப தலைவரும் வக்பு சபை உறுப்பினருமான மௌலவி பஸ்லுர் ரஹ்மான், கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக் முதலிய பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவரும் வக்பு சபை உறுப்பினருமான மௌலவி பஸ்லுர் ரஹ்மான் இரங்கலுரை நிகழ்த்தினார். அவர் உரையாற்றும் போது, இப்பிரதேசம் திகனக் கலவரத்தின் போது உயிர் இழந்த சாரதியின் கிராமமாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் அம்பால கிராமத்தில் வாழும் எந்தவொரு முஸ்லிம் குடும்பங்களுக்கு ஒரு கீறலோ பாதிப்போ ஏற்படாமல் இங்குள்ள இளைஞர்களை ஒரு கட்டுக் கோப்புக்குள் வைத்திருந்த ஒரு நல்ல மனிதர். சகல இன மக்களுடனும் மிக நெருக்கமான உறவைப் பேணி வந்தவர். அது மட்டுமல்ல முஸ்லிம் சமய கலாசார தபால் துறை அமைச்சினால் சிறந்த பள்ளிவாசல்களுக்கான விருது வழங்கும் விழாவில் அவர் சமய சகவாழ்வுக்காக விசேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒரு பௌத்த சமயப் பெரியாராவர்.
கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் அவரது மரணம் சமய , சமூக நல்லிணக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று கண்டி வாழ் முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Thanks for reading….