கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசி நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து இன்று விநியோகிப்பதற்கு தயாராகவிருந்த நிலையில், அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க குறிப்பிட்டார்.
புறக்கோட்டை 05 ஆம் குறுக்கு வீதியில் உள்ள கடை ஒன்றிலிருந்தே 750 மூடை அரிசி கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
புறக்கோட்டையிலுள்ள சில மொத்த விற்பனையாளர்கள், அரிசியை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயல்வதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சில வர்த்தகர்கள் நிர்ணய விலைக்கு அதிகமான விலையில் அரிசி விற்பனை செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நுகர்வோர் விவகார அதிகார சபையினரின் கண்காணிப்பின் கீழ் புறக்கோட்டையில் அரிசி விற்பனை மேற்கொள்ளப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Thanks for reading….