வெலிசறை பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 225 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அரிசி மூடைகளுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 230 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம மற்றும் வெலிசறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments
Thanks for reading….