இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

கொரோனா நோயில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய கால் அழுத்துடன் இயங்கும் கைகழுவும் நீர் குழாய் கண்டுபிடிப்பு

tamilsolution_ad_alt



கொரோனா வைரஸ் கிருமிகளிமிடருந்து கைகளினை பாதுகாக்கவும்,சுகாதாரத்திற்கு ஏற்ற விதமாக கைகளை சுத்தம் செய்யவிஷேடதொழினுட்பங்களை பயன்படுத்தி கால் அழுத்துடன் இயங்கும் கைகழுவும் நீர் குழாய்
 சாதனமொன்று சாய்ந்தமருதை சேர்ந்த மாத்தறை பல்கலை கல்லூரியில் பயின்று வருகின்ற ஏ.எம்.எப் செளபாத் Sowfath Sawfãťh என்ற மாணவரினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை அவர் இன்று (10)தனது இல்லத்தில் வைத்து அறிமுகம் செய்தார்.

 இதன் மூலம் கைகளினால் பரவும் கிருமிகளை தடுக்க கால்களின் அழுத்த உதவியுடன் இயங்க கூடிய கை கழுவும் உபகரணம் ஒன்றை குறைந்த உற்பத்தி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது .

இவ் கண்டுபிடிப்பு கால் இன் சிறிய அழுத்தம் மூலம் நீர் மேலே அனுப்பப்படுகிறது. கைகளை பயன்படுத்தி குழாயை (Tap) திறக்கதேவையில்லை.

இதன் பயன்பாடுகள்

* உற்பத்தி செலவு குறைவு
* கைகளினால் பரவும் கிருமிகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது
* இலகுவாக வேண்டிய இடத்திற்கு எடுத்து செல்ல முடியும்.
*சூரிய சக்தியின் மூலம் இதற்கு மின் வழங்கப்படுகிறது.
*நீர் இல்லாத போது நீரை இதில் சேமித்து வைக்க முடியும்.

மேலும் இது இவரின் மூன்றாவது கண்டுபிடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 2019 ஆண்டு ஜீனியஸ்7 விருதுப் பிரிவின் ஊடாக எடின்பார்க் சர்வதேச விருதினை பெற்றவருமாவார்.கல்முனை, ஸாஹிறா கல்லூரி பழைய மாணவரென்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.