கொழும்பு ,கம்பஹா ,களுத்துறை ,புத்தளம், கண்டி, கேகாலை ,அம்பாறை மாவட்டங்களை தவிர்ந்த இதர அனைத்து மாவட்டங்களிலும் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாகும்.
மறு அறிவித்தல்வரை மேற்படி மாவட்டங்களில் தினந்தோறும் இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு மறுநாள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் .
கண்டி , கேகாலை ,அம்பாறை மாவட்டங்களின் அலவத்துகொட ,அக்குறணை ,வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
மேற்படி மூன்று மாவட்டங்களின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் தினந்தோறும் இரவு 8 மணிக்கு அமுலாகும்.
கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை , கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி , வாழைத்தோட்டம் , மருதானை, கொத்தட்டுவ , முல்லேரியாவ, வெல்லம்பிட்டி ,கல்கிஸை , தெஹிவளை ,கொஹுவல ஆகிய பொலிஸ் பிரிவுகள் ,
கம்பஹா மாவட்டத்தின் ஜா எல, கொச்சிக்கடை ,சீதுவை பொலிஸ் பிரிவுகள் ,
புத்தளம் மாவட்டத்தின் புத்தளம்,மாரவில ,வென்னப்புவ பொலிஸ் பிரிவுகள்,
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம ,பயாகல,பேருவளை ,அழுத்கம பொலிஸ் பிரிவுகள் ,
இவை தவிர்ந்த இதர பொலிஸ் பிரிவுகளில் 22 ஆம்திகதி முதல் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் தினமும் இரவு 8 மணிக்கு அமுலாகும்.
இதன்படி பண்டாரகம ,பயாகல,பேருவளை ,அழுத்கம, புத்தளம்,மாரவில ,வென்னப்புவ ,ஜா எல, கொச்சிக்கடை ,சீதுவை ,கொட்டாஞ்சேனை ,கிராண்ட்பாஸ்,பம்பலப்பிட்டி ,வாழைத்தோட்டம் ,மருதானை ,கொத்தட்டுவ ,முல்லேரியாவ,வெல்லம்பிட்டி ,கல்கிஸை ,தெஹிவளை ,கொஹுவல ,அலவத்துகொட ,அக்குறணை ,வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்
பாடசாலைகள் ,பல்கலைக்கழகங்கள் ,பிரத்தியேக வகுப்புகள் சினிமா தியேட்டர்கள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது.ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பகுதிகளில் கூட்டுத்தாபனங்கள் ,வங்கிகள் இயங்கவுள்ளன.
No comments
Thanks for reading….