On: April 29, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து நாவலப்பிட்டிய நகரம் இன்று புதன்கிழமை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டியைச் சேர்ந்த இரண்டு கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து நாவலப்பிட்டிய வர்த்தகச் சங்கத்தின் தலைவர் கித்சிறி கருணாதாஸ, இன்று நகர வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான அறிவிப்பை விடுத்திருக்கின்றார்.
அதேபோல இன்று அனைத்து பஸ் போக்குவரத்துக்களும் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருக்கின்றன என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நாவலப்பிட்டி நகரம் முழுவதிலும் கிருமி தொற்றுநீக்கும் திரவம் தெளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Thanks for reading….