ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் தமது வீடுகளில் இருந்து வெளிச்செல்ல வேண்டும் என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (25) தெரிவித்துள்ளது.
அத்தகைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நடந்து சென்றடைய முடியுமான அருகில் உள்ள விற்பனை நிலையங்களை தெரிவுசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவது தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாக 1அல்லது 2 என்ற இலக்கங்களை கொண்டுள்ளவர்கள் திங்கட்கிழமை நாட்களில் மாத்திரம் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் செவ்வாய்க்கிழமை வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் புதன்கிழமை வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் வியாழக்கிழமை வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் வெள்ளிக்கிழமை வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
( Ex: உங்கள் அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 6 என்றால் உங்களுக்கு அத்தியாவசிய வேலைக்காக புதன் கிழமை வீட்டை விட்டு வெளியே செல்லலாம்)
No comments
Thanks for reading….