உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சம்மாந்துறையில் துஆ பிராத்தனை !
கடந்த ஆண்டு இலங்கை உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளில் சிக்கி உயிர் நீத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து துஆ பிராத்தனை நிகழ்வு இன்று (21) காலை சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசீக்,முச்சபை தலைவர்,செயலாளர், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் விசேட துஆ பிராத்தனையினை அஷ்ஷேக் அப்துல் காதார் மிஸ்பயி நிகழ்த்தினார்.
ஐ.எல்.எம் நாஸிம்
No comments
Thanks for reading….