கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு 27ம் திகதி காலை வரை தொடர் ஊரடங்கு மீண்டும்
கொழும்பு , கம்பஹா , களுத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த அறிக்கையில் திருத்தம் மேற்கொண்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று முற்பகல் புதிய அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதற்கமைய கொழும்பு , கம்பஹா , களுத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை தினமும் இரவு எட்டு மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு இந்த மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 8 மணிக்குப் பிறப்பிக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகித திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டு ள்ளது.
இதக் பிராகரம் வார இறுதி நாட்களான ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமையும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் ஊ ரடங்கு சட்டம் தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு ,கம்பஹா , களுத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் குறித்த மாவட்டங்களிலிருந்து வௌியேறவும் அனைவருக்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை நடத்திச் செல்லவும் விவ சா யத்தில் ஈடுபடவும் ஏ ற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் திருத்த மின்றி அமுல்படுத்தப்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments
Thanks for reading….