இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பரீட்சைகள் தொடர்பாக கல்வி அமைச்சின் தீர்மானங்கள்.

tamilsolution_ad_alt

பொதுப் பரீட்சைகள் எதனையும் பிற்போடும் எந்த முடிவையும் அரசாங்கம் எடுக்காது என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இதே மாணவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாடசாலைகளுக்கு டியுஷன்களுக்கு சொல்லமுடியாது சிரம்ப்பட்டனர். இம்முறை அதே மாணவர்களுக்கு மீண்டும் சிரமம். பரீட்சை ஒன்றை பிற்போடுவதன் மீலம் மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. எதுவும் சரி வராத போது இறுதி நடவடிக்கையாக, படத்தின் குறிப்பிட்ட பகுதிகளை பரீட்சைக்கு உட்படுத்தாது நீக்கி விட்டு பரீட்சையை நடாத்த அரசாங்கம் நாடுகிறது.

முன்னைய அரசு போன்று பிரச்சினையின் போது பரீட்சையை பிற்போடும் வகையில் நாம் செயற்பட மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த உயர் தரப் பரீட்சை என்பன திட்டமிடப்பட்ட வகையில் நடைபெறும் என்பதே தற்போது வரையான அரசின் முடிவாகும்.

எனினும், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை நிகழ்நிலையில் Online சமர்ப்பிக்க முடியாது போன மாணவர்களுக்கு இன்னும் அதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அச்சிடப்பட்ட விண்ணப்ப படிவத்தை அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு இரு வாரங்களுக்குள் தபாலில் அனுப்புவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

அனைத்து பாடசாலைகளும் ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பிப்பதை எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான உத்தேச காலப்பகுதி எதனையும் குறிப்பிடவில்லை.

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.