தெரன தொலைக்காட்சியின் "வாத பிடிய" நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இடையில் இடைவெளி விடப்படுகிறது.
அந்த நேரம், இது break time தானே என்று நினைத்து முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசுகிறார் chathura எனும் தெரன ஊடகவியலாளர்.
இதன் வீடியோவும் leak ஆகி விட்டது.
இந்த வீடியோ வைப் பார்க்கின்ற எந்த முஸ்லிமும் கொதித்தெழாமல் இருக்க மாட்டான்.
இந்த வீடியோ வெளியான பிறகு chathura வுக்கு எதிராக முஸ்லிம்கள் அடிக்கும் மிகவும் மோசமான comments களை இன்று (02.04.2020) காலை நடைபெற்ற Derana Aruna நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
இவ்வாறான comments களுக்கு பதிலடியாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனவாத கருத்துக்களை கக்கி வருகிறார்கள்.
இதனடிப்படையில்,
இலங்கையின் இன்றைய பேசுபொருளாக இவ்விடயம் மாறி இருப்பதை மீடியாக்களில் காண முடிகின்றது.
நாங்கள் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்
நேற்று வெளியான அந்த வீடியோ தவறுதலாக வெளியிடப்பட்டது என்பது நிச்சயம் இல்லை.
வேண்டுமென்றே தவறுதல் போன்று வெளியிடப்பட்டும் இருக்கலாம்.
இதன் மூலம் முஸ்லிம்களை கொதிக்க வைத்து அதன் மூலம் இனவாதத்தை மேலும் தூண்ட சந்தர்ப்பங்களை உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கலாம்.
எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் கோபம் அடைந்து கடும் வார்த்தைகளை கொட்டித் தீர்த்து இனவாதத்துக்கு துணைபோகாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இனவாதிகளின் பொறிக்கு அகப்பட்டு மாட்டிக் கொள்ளக்கூடாது.
சுவர்க்க வாசிகளின் பண்புகளை அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடும் போது
وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِؕ 3:134
"..தவிர அவர்கள் கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்;.."
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"من كان يؤمن بالله واليوم الآخر، فليقل خيرًا أو ليصمت"
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் யார் உண்மையாகவே விசுவாசிக்கின்றார்களோ அவர்கள் நல்லதை பேசட்டும், அல்லது (நல்லது பேச முடியாமல் போனால்) மெளனமாக இருக்கட்டும்."
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்
நமது சகோதரர்கள் மோசமான வார்த்தைகளைப் பேசுவதால் அவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு தேவை இல்லாத பிரச்சினைகள் உருவாவது மட்டுமல்லாமல் அவர்கள் அல்லாஹ்வுக்கே ஏசும் நிலை உருவாகுகிறது.
முஸ்லிம் சகோதரர்களின் comments களுக்கு பதிலடி கொடுத்த
ஒரு சிங்களவர் இப்படி எழுதியிருந்தார்.
"අල්ලා මලත් ඔච්චරයි.
පුච්චනවාමයි."
"அல்லாஹ் மரணித்தாலும் அவ்வளவு தான், எரித்தே தீருவோம்"
நமது மார்க்கம் வழிகாட்டும் விடயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அல்லாஹ்வுக்கு ஏசும் நிலையை உருவாக்குவதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًاۢ بِغَيْرِ عِلْمٍ ؕ
"அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்."
அல்குர்ஆன் 6:108
எனவே, முஸ்லிம்களாகிய நாம் பொறுமையுடனும் நிதானத்துடனும் தூர நோக்குடனும் ஈமானுடனும் செயற்பட வேண்டும்.
மேலும், முஸ்லிம்களுக்கு எதிராக செய்யப்படும் பொய் பிரச்சாரங்களுக்கு எதிராக அழகிய முறையில் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்.
சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்ற மார்க்க அறிவுள்ள எத்தனையோ பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் களமிறங்கி அழகிய முறையில் பதில்களை வழங்கலாம்.
அப்துர் ரஹ்மான் என்ற ஒரு சகோதரர் சிங்கள மொழியில் மிகவும் அழகான முறையில் இனவாதத்துக்கு எதிராக ஒரு வீடியோ பேசி வெளியிட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அதே போன்று,
சிங்கள மொழியில் தேர்ச்சி இல்லாதவர்கள், தமிழிலும் மிகவும் அழகிய முறையில் பதில்களை பேசலாம்; எழுதலாம்.
தமிழில் வழங்கப்படும் பதில்களை பார்க்கும் சிங்கள மொழி தெரிந்த சகோதரர்கள் அதனை சிங்கள மொழியில் பதிலாக போடலாம்.
அதே நேரம்,
இனவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் நாமே இனவாதத்தை பேசி விடவும் கூடாது.
நமது ஒவ்வொரு தொழுகையிலும் அல்லாஹ்விடம் இந்த இனவாதத்துக்கும் இனவாதிகளுக்கும் எதிராக பிரார்த்தனை செய்வதுடன் இனவாதத்தை துடைத்தெறிய நம்மால் முடியுமான அழகிய பங்களிப்புகளை மேற்கொள்ளவும் முன் வருவோம்.
அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை புரிவானாக!
நஸ்ரி ஜிப்ரி ஸலபி
02-04-2020
No comments
Thanks for reading….