இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

2020. 04.09 அமைச்சரவை தீர்மானம்

tamilsolution_ad_alt

2020.04.09 அன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக கலந்துரையாடலில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
அமைச்சரவை பேச்சாளர், உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள்
01. நாட்டில் வெளிநாட்டு நாணய வீதத்தை ஸ்திரப்படுத்துவதற்காக அரசாங்கம் கடைபிடிப்பதற்கு எதிர்பார்த்துள்ள நடைமுறையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
02. இலங்கைக்கப்பால் வாழும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் நேரடியாக பணத்தை வைப்பீடு செய்யக்கூடிய விசேட நடைமுறையொன்றை ஏற்படுத்தி வெளிநாட்டு கணக்கொன்று ஆரம்பிக்கப்படும். இந்த கணக்கில் பணத்தை வைப்பீடு செய்வது வெளிநாட்டவர்களுக்கு நன்மையுள்ளதாவதுடன் பொதுவான வட்டி வீகிதாசாரத்திலும் பார்க்க 2 சதவீதம் அதிகரித்த வட்டி, இலங்கை மத்திய வங்கியினால் செலுத்தப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தக் கணக்கில் வைப்பீடு செய்யும் பணத்திற்கு ஆகக்கூடிய கால எல்லை 6 மாதம் ஆகும்.
03. வெளிநாட்டு நாணயத்திற்கு ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்காக இறக்குமதியாளர்களிடம் அத்தியாவசியமல்லாத பொருட்களை இச்சந்தர்ப்பத்தில் இறக்குமதி செய்ய வேண்டாம் என கோரப்படுகின்றது.

04. தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பு கொண்டுள்ள PCR பரிசோதனை இயந்திரங்கள் 51 ம் கொரோனா வைரசு தொற்று பரிசோதனைக்காக பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் பெருந்தோட்டத் தொழிற்தறை மற்றும் ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன அவர்கள்
01. தற்பொழுது குடும்பங்கள் என்ற ரீதியில் சுமார் 54 இலட்சம் கும்பங்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்ட்டுள்ளன. இவை அனைத்தும் நேரடி நிதி மூலமான பயன்களாகும்.
02. இதற்கு மேலதிகமாக நாளாந்த வாழ்வாதார அடிப்படைக்கு ஏதுவாக அமைந்த தொழிலை இழந்த நிறுவனங்கள் என்ற ரீதியில் சுமார் 10 இலட்ச குடும்பங்களுக்கு ஏதேனும் நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
03. கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சர்வதேசம் பாராட்டியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் அடிப்படையில் விசேட குழுவொன்றுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

04. பல்வேறு விமான நிலையங்களில் இலங்கைக்கு வரும் எதிர்பார்ப்புடன் உள்ள சுமார் 33 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இலங்கைக்கு வருவதற்கான எதிர்பார்புடனுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் நாட்டில் நிலமை ஸ்திரமான பின்னர் அறிவிக்கப்படும்.
https://www.vishmithacloud.com/1-s-UTNw5ZRX
 https://www.vishmithacloud.com/1-s-lv8iVP6p
 https://www.vishmithacloud.com/1-s-pjybXxOs
https://www.vishmithacloud.com/1-s-AUgW1Y7Z
(அரசாங்க தகவல் திணைக்களம்) 

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.