இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சமூக வலைத்தளங்களில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்துபவர்களுக்கு 07 ஆண்டு சிறை!

tamilsolution_ad_alt

இன, மத ரீதியில் சமூக வலைத்தளங்கள் மூலம் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக 07 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவ்வாறான ஒன்பது சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கம ளிக்கையிலேய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், அதிக அச்சுறுத்தலான மாவட்டங்களில் மக்கள் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் மே 04 ஆம் திகதி புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை முறையாக பின்பற்றி ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் ஏனைய தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலங்களில் உற்சவங்கள் நடத்தல், சுற்றுலாக்களை மேற்கொள்ளுதல், குழுக்களாக இணைந்து செயற்படுதல், பல்வேறு சமய நிகழ்வுகளை நடத்துதல், விளையாட்டு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல், சங்கீத இசைக் கச்சேரிகளை நடத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு இணங்க அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.