இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

மனைவிக்கு கொரோனா.. நரைத்த தாடியோடு மக்கள் முன் தோன்றிய ஜஸ்டின்ட்ரூடோ.

tamilsolution_ad_alt


ஜஸ்டின் ட்ரூடோ தனது பேச்சில் கொரோனா வைரஸ் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி இருக்கிறது. தினமும் நாம் செயல்படும் முறையை இந்த கொரோனா வைரஸ் மொத்தமாக மாற்றி உள்ளது. நாம் வீட்டில் வேலை பார்க்க வேண்டும், நம்முடைய வியாபாரத்தை சில நாட்களுக்கு மூட வேண்டும், சில நாட்களுக்கு வருமானத்தை இழக்க வேண்டும், வீட்டு வாடகை கட்டுவது, பள்ளி பீஸ் கட்டுவது என்று நிறைய பிரச்சனைகள் நமக்கு ஏற்பட வாய்ப்புள்ளது..

#கனடாவில் இப்படி நினைத்து வருந்திக் கொண்டு இருக்கும் மக்களுக்கு ஒன்று சொல்கிறேன். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். உங்களின் வருமானத்தை பாதுகாக்கவும், உங்களின் குடும்பத்தை, கல்வியை, பட்ஜெட்டை பாதுகாக்கவும், உங்கள் வேலையை பாதுகாக்கவும் நாங்கள் இருக்கிறோம். இதற்காக 27 பில்லியன் டாலர் திட்டம் ஒன்றை கொண்டு வருகிறோம். இந்த நிதி உங்களுக்கு உதவும்.

அதேபோல் கூடுதலாக 82 பில்லியன் டாலர் திட்ட அறிவிப்பை வெளியிடுகிறோம். இது கனடாவின் மொத்த ஜிடிபியைவிட 3 மடங்கு அதிகம். நீங்கள் வீட்டில் முடங்கி இருந்தாலோ , வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டாலோ, உங்களுக்கு கொரோனா தாக்கி இருந்தாலோ, உங்கள் வியாபாரம் நஷ்டப்பட்டு இருந்தாலோ நாங்கள் உங்களுக்கு உதவுவோம். ஒவ்வொரு இரண்டு வாரமும் நாங்கள் உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்துவோம்.

அதேபோல் வியாபாரம் செய்யும் நபர்களுக்கு நிதி உதவி, வரி சலுகை எல்லாம் அளிக்கப்படும். கனடாவில் வேறு நாட்டில் இருந்து வந்து குடியேறி இருக்கும் எல்லோருக்கும் பணம் கொடுக்கிறோம். உங்கள் பொருளாதாரம் சரியாது. கவலை வேண்டாம். அதே சமயம் நமது நாட்டின் பாதுகாப்பும் முக்கியம். இதனால் அமெரிக்கா, கனடா போக்குவரத்தை தடை செய்கிறோம். எல்லோருடைய இழப்பிற்கும் அரசு பொறுப்பேற்கும். இந்த கொரோனவை நாங்கள் ஒன்றாக எதிர்கொள்வோம், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ட்ரூடோ அதுகுறித்து நினைத்து உடைந்து போகாமல் மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டு இருக்கிறார்.

ஆவர் வெளியிட்ட அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அவரின் இந்த பற்றை மற்றும் கடமை உணர்ச்சியை அந்நாட்டு மக்கள் பாராட்டி வருகிறார்கள்..

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.