இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஊடகவியலாளர்கள் யார்?

tamilsolution_ad_alt


சமூக வலைதளங்களில் ஊடகம்(MEDIA), ஊடகவியலாளர்கள் தொடர்பில் பல விமர்சனங்களை சிலர் பதிவிட்டும் அதற்கு பல உத்தமர்கள் பின்னூட்டம் இடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

வெட்டியாக வீராப்பு பேசுபவர்கள் இவர்கள் பேசிட்டு போகட்டும் என்று விட்டாலும் இவர்களின் விமர்சனம் நாளுக்கு நாள் வித்தியாசமாக உருவெடுப்பதனால் நானும் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் எனக்கு தெரிந்த சில விடயங்களை தெளிவுக்காக பகிர்ந்து கொள்கிறேன்..

முதலில் ஊடகம் என்றால் என்ன?ஊடகவியலாளர்கள் அவர்கள் யார்? அவர்களது பணிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஒரு நாட்டின் ,சமூகத்தின் இருப்புக்கு மருத்துவம்,கல்வி,அரசாங்கம்,பாதுகாப்பு, சட்டம் போன்றவை எவ்வாறு முக்கியத்துவமோ அதே போன்ற ஒரு முக்கியமான துறை ஊடகமாகும், எல்லா துறைகளுக்கு சில வரையறை இருந்தாலும் ஊடகம் மக்கள் சார்பாக நாட்டில் நடைபெறும் அனைத்து செயற்பாடுகள் மற்றும் ஏனைய துறைகளின் இரு பக்கங்கள் மற்றும் மக்களுக்கான அத்தியாவசிய தகவல் போன்றவற்றை மக்களுக்காக வழங்கும் ஒரு மக்கள் சேவைக்கான துறையாகும்.

நாட்டின் அரசாங்கம்,ஜனாதிபதி,பிரதமர் ,ஏனைய துறையினர் மக்களுக்கு ஒரு முக்கியமான தகவல்களை வழங்குவதற்கும்,அவசர அனர்த்தங்கள் போன்றவற்றின் விழிப்புணர்வு, பாதுகாப்பு தகவல்களை வழங்குவதற்கு ம் இத்துறையை பயண்படுத்துவார்கள். ஊடகத்தை தவிர்த்து மக்களோடு எத்துறையும் தொடர்பு பேண முடியாது. அதனால்தான் . ஊடரங்கு உத்தரவுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், யுத்தம்,தடைசெய்யப்பட்ட பகுதிகள் போன்றவற்றிற்கு ஊடகங்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுகிறது.
(ஊடகம் பற்றிய அறிமுகம் போதும் என நினைக்கிறேன்)

அடுத்து ஊடகவியலாளர்கள் என்றால் யார்?
ஊடகத்துறை என்பது ஆபத்தான,சிரமமான ஒரு துறை அதனால் ஒரு சிலரே இத்துறைக்குள் நுழைவார்கள். அதற்கு சிரிய உதாரணம் ஒன்றை சொல்லிவிட்டு போகலாம் என நினைக்கிறேன். அதாவது எனக்கும் ஊடகத்துறையில் ஆர்வம் இருந்தபடியால் தலைநகரில் ஊடக படிப்பை (Diploma In Journalism) கற்பதற்கு இணைந்தேன் அங்கு முதலாவது வகுப்பில் ஊடகத்துறையில் கடமையாற்றி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்களை திரையில் போட்டுக்காட்டி ஊடகத்துறையின் ஆபத்தை விரிவுரையாளர் விளங்கப்படுத்தினார் . அதனை தொடர்ந்து இரண்டாவது வகுப்பில் முதல் வகுப்பில் கலந்துகொண்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரமே இருந்தோம் அல்லாஹ்வின் உதவியில் இன்று நாங்கள் அனைவரும் நாட்டின் நாலா பக்கமும் ஊடகத்துறையில் பணியாற்றுகிறோம். ஊடகவியலாளர்களாக பணியாற்றுவது பாரிய சிரமம் என்றாலும் கொடுப்பனவுகள் பெரிதாக இருக்காது, சிலருக்கு கொடுப்பனவே இல்லை வெறும் சமூக சேவையாகவே ஊடகப்பணி செய்து வருகிறார்கள்

மேற்கூறிய ஊடகங்கள் தங்களது செயற்பாட்டை சிறப்பாக செய்வதற்கு ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஊடகவியலாளர்களை நியமிப்பார்கள் அவர்களை அடையாளப்படுத்திக்கொள்வதற்கு ஊடக அடையாள அட்டை வழங்கி இருப்பார்கள் இருவகையான ஊடக நிறுவனங்கள் உண்டு அரச ஊடகம்,தனியார் ஊடகம் எந்த ஊடகமாக இருந்தாலும் அரசாங்க தகவல் திணைக்களம் ( Department Of Government Information Srilanka) இல் தங்களது ஊடகம் மற்றும் ஊடகவியலாளர் களை பதிவு செய்ய வேண்டும்.
இத் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் அடையாள அட்டை வழங்கப்படும் இவ் அடையாள அட்டை மிகவும் பெறுமதியானதும் முக்கியத்துவமானதுமாகும். இன்னும் சில ஊடக நிறுவனங்கள், உள்ளூர் ஊடகங்கள் அவர்கள் ஊடகப்பணிக்காக சிலரை நியமித்து நிறுவன அடையாள அட்டை வைத்திருப்பார்கள் இதில் சிலர் ஊடக ஆர்வமுள்ளவர்களே.

ஊடகவியலாளர்களுக்கென்று சில கடமைப்பாடு இருக்கிறது அதனை அவர்கள் சிறப்பாக செய்வதற்கு பயிற்ச்சி பெற்றிருப்பார்கள். அதே சமயம் ஊடக ஆர்வம் கொண்டவர் சிலநேரங்களில் சில தவறுகள் விட்டாலும் அவர்களின் ஊடக ஆர்வம் வரவேற்க்கத்தக்கது. வீட்டில் இருந்து கொண்டு வீராப்பு பேசுவதை விடுத்து களத்தில் தைரியமாக,துணிச்சலுடன் பணியாற்றுவது பாராட்டத்தக்கது, களப்பணிகளின் அனுபவ கற்றலில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

மேற்கூறப்பட்ட விளக்கம் போதும் என நினைக்கிறேன். ஊடகவியலாளர்களை விமர்சிக்கும் ஹீரோக்களே!
ஊடகவியலாளர்கள் நாங்கள் வீட்டில் ஓய்வெடுத்துக்கொள்கிறோம்,எங்கள் பணிகளை சிறப்பாக செய்து காட்ட களத்திற்கு நீங்கள் வருவதற்கு தயாரா? உங்களை வழிநடாத்த நாங்கள் தயார்!

ஜஸாகல்லாஹ்..
எம்.பஹ்த் ஜுனைட்
ஊடகவியலாளர்.

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.