இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

அமெரிக்க இராணுவமே சீனாவில் கொரோனவை பரப்பியது. சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் குற்றச்சாட்டு.

tamilsolution_ad_alt


அமெரிக்க இராணுவத்தின் மூலமே கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரத்திற்கு கொண்டு வரப்பட்டதாக சீன அரசின் பேச்சாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்க இராணுவமே இந்த தொற்றுநோயை வுஹானுக்குக் கொண்டு வந்திருக்கலாம்" என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனாவில் நீராவி கோட்பாடு செயலமர்வு மற்றும் வுஹானில் நடைபெற்ற உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்க (ராணுவ) விளையாட்டு வீரர்களால் 2019 ஆம் ஆண்டில் இந்த வைரஸ் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரொபட் ரெட்பீல்ட் மார்ச் 11ம் திகதி வெளியிட்டுள்ள தகவலை அடிப்படையாக வைத்தே சீன அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா பரவுவதற்கு முன்னர் அமெரிக்காவில் நிகழ்ந்த சில மரணங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் தான் காரணம் என்று பின்னர் தெரிய வந்துள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரொபட் ரெட்பீல்ட் மார்ச் 11ம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மரணங்கள் எப்போது நிகழ்ந்தன எத்தனை பேர் மரணித்தார்கள் என்பது போன்ற விபரங்கள் வெளியிடப் படவில்லை என்றும் தெரிவித்துள் சீன அதிகாரி ஜாலோ லிலியான் இந்த தகவல் மூலம் கொரோனா சீனாவின் வூஹானிலிருந்து பரவ ஆரம்பிக்க வில்லை என்பது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவமே சீனாவில் இந்த வைரஸ் பரவலை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ள ஜாலோ லிலியான் அமெரிக்கா வெளிப்படைத் தன்மையை பேணி தரவுகளை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.