இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ மனைவியையும் பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்வோம்.

tamilsolution_ad_alt


அன்றொரு நாள் உலகமே சிரியா நாட்டின் அவல நிலையை கண்டும் காணாமல் இருந்த சமயத்தில் சிரியா முஸ்லிம்களுக்கு தனது நாட்டில் நிரந்தர அடைக்கலம் கொடுத்தவர் தான் இந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ.

சொந்த நாட்டில் அகதியாக்கப்பட்டு உயிர் பிழைத்து வேறு நாட்டிற்கு செல்லும்போது இங்கு வராதே என விரட்டியடித்த நாடுகளுக்கு மத்தியில்..

விமானத்தை அனுப்பி சிரியா முஸ்லிம்களை அழைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை விமான நிலையத்திற்கே சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்த உலகின் ஒரே பிரதமர் கனடா பிரதமர் மட்டும்தான்.

பணத்தில் ஊறி திளைக்கும் சவுதி அரசாங்கம் கூட இதை செய்யவில்லை.

அப்படிப்பட்ட மனிதநேய குணம் படைத்த ஜஸ்டின் ட்ருடோ அவர்களின் மனைவி சோபி கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியானது கடுமையான மன வேதனையை கொடுக்கின்றது.

வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமாக வேண்டும் என்பதுதான் நமது விருப்பமும் என்றாலும், நமது குடும்பத்தில் ஒருவருக்கு இந்த கொரானா வந்தால் நாம் எந்தளவிற்கு இறைவனிடம் வலியுறுத்தி குணப்படுத்த கூறி மன்றாடுவோமோ அந்தளவிற்கு இவருக்காக பிரார்த்தனைகளை அதிகரிப்போம்.

முஸ்லிம்களுக்கு துஆ என்ற ஆயுதத்தை விட பெரிய ஆயுதம் வேறில்லை. தொழுகையிலும், பிற நேரங்களிலும் இருகரம் ஏந்தி பிரார்த்தித்து சோபி அம்மையார் பூரண நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்போம்.

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.