சர்ச்சையில் இருந்த பிஸ்கால் காணியை பயன்படுத்த மாநகரசபை சிரமதானம் செய்கிறது : களத்தில் ஹரீஸ் எம்.பி, முதல்வர் ரக்கீப் உட்பட பல மக்கள் பிரதிநிதிகளும் பங்கெடுப்பு.
நூருல் ஹுதா உமர்
மிக நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்து வந்த கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்முனை வாசல் சுற்றுவட்டத்தின் அருகில் அமைந்துள்ள பிஸ்கால் காணியை கல்முனை மாநகர சபை ஊழியர்கள் இன்று மதியம் சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்தனர்.
இப் பிஸ்கால் காணியினை துப்பரவு செய்து முதல் கட்டமாக கல்முனை மாநகர சபைக்குரிய வாகன தரிப்பிடம் அல்லது மாநகர சபைக்குரிய வேறு தேவைகளுக்கு உபயோகப்படுத்துவதற்க்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் இங்கு தெரிவித்தார்.
இக் காணியினை துப்பரவு செய்யும் ஆரம்ப கட்ட வேலைகள் இன்று (9) மதியம் முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப், மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.ரோசன் அக்தர், எம்.எஸ்.எம் நிசார், எம்.எஸ் உமர் அலி, ஏ.எம்.எம்.நவாஸ், மாநகர ஆணையாளர் எம்.சி அன்சார், கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.சித்தீக், ஆகியோரின் பங்குபற்றலுடன் மாநகர சபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
இப் பிஸ்கால் காணியினை நேற்றைய தினம் சில நபர்களினால் வெளிப்படையாக அபகரிக்கப்பட இருந்த நிலையில் முதல்வர் ஏ.எம் ரக்கீப் அவர்களின் தலையீட்டினால் அந்த செயற்பாடு முறியடிக்கப்பட்டது.என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Thanks for reading….