நூருல் ஹுதா உமர்.
இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக மாற்றத்திற்கும் அபிவிருத்திக்குமான மையத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பிரதான சுதந்திர தின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (04) மாலை சமூக மாற்றத்திற்கும் அபிவிருத்திக்குமான மையத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவில் சுதந்திர தின விசேட உரையை சட்டத்தரணி எம்.எம். முஜீப் (மௌலவி) நிகழ்த்தினார்.
இச்சுதந்திர தின விழாவில் சாய்ந்தமருது -மாளிகைக்காடு உலமா சபை தலைவர் சலீம் (ஸர்கி) பொருளாதார உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீட பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபுபக்கர், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா ,செயலாளர் அப்துல் மஜீத், நிர்வாக சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது -மாளிகைக்காடு வர்த்தக சங்க பிரதிநிதிகள், பிரதேசத்தில் உள்ள அரச, தனியார் நிறுவனங்களின் பிரதானிகள், பல முக்கிய பிரமுகர்களும் பொது மக்களும் பங்கேற்றனர்.
No comments
Thanks for reading….