இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பெரியநீலாவணை புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலயத்தில் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபா செலவில், கிழக்கு ஆளுநரால் வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு.

tamilsolution_ad_alt





அபு ஹின்சா


கிழக்கு மாகாண சபை நிதி  ஒதுக்கீட்டில் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை கல்வி வலய  மருதமுனை கமு/ புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடம்  திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (28) பகல் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எம். முஹம்மட் நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,
சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுள் நஜீம் ஆகியோர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டனர்.

மேலும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் சங்கத்தினர் , பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.